நைரோபிக்குச் சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த அதில் 149 பயணிகளும் 8 விமானச்சிப்பந்திகளும் உயிரிழந்துள்ளனர்.
Addis Ababa-விலிருந்து Nairobi நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம், Bishof-tu-என்னும் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது.
தலைநகருக்குத் தென்கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில், விமானம் விழுந்த இடத்தைச் சுற்றித் தேடி மீட்கும் பணி நடைபெற்று வருவதாக, விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்து நேர்ந்ததுடன், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியப் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.