ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிவுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. ஏராளமானோர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் சூழலில், இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் நோயாளிகள் உள்ளிட்டோர் அலறியடித்து கொண்டு உயிர்பிழைக்க தப்பித்து வெளியே ஓடினர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர், நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் பணியின் போது ஏற்பட்ட கோளாறில் தீவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.