மியான்மர்-தாய்லாந்து எல்லைப்பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அடர்ந்த வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் புரட்சி மூலம் ஆட்சி அதிகாரங்களை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக இராணுவத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடிவருகின்றனர். காட்டுப்பகுதியில் உள்ள கேரன் இனக்குழு மக்கள் ஆயுமேந்திய தாக்குதல்களையும் நடத்திவருகின்றனர். இதனால், மியான்மர்-தாய்லாந்து எல்லைப்பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தாய்லாந்து நாட்டுக்குச் சொந்தமான காடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.