தலிபான் பற்றி அறியப்படாத பக்கங்கள்......
அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் 'தலிபான்' பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. இது 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா.கனடா. ஆஸ்திரேலியா. மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர்.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். அவர் 2013ல் மரணமடைந்துள்ளார். தலிபான் தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நோட்டா படைகளுக்கெதிராகவும் கொரில்லா முறையில் போரிட்டு வருகிறது. இப் படையில் உள்ள பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். தலிபான் பாகிஸ்தான் அரசிடமிருந்து இராணுவ பயிற்சிகளையும் உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது. 1980 களில் முஜாகிதீன் அமைப்பிலிருந்தும் பலர் இவ்வமைப்போடு இணைந்துக்கொண்டனர்.
1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை கைபற்றிருந்த தலிபான் 'ஷிரியத்' எனும் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. ஷிரியத் சட்டத்தின் படி பெண்கள் படிப்பதோ வேலைப் பார்பதோ ஆண் துணையின்றி வெளியே செல்வதோ குற்றம் என தலிபான் தீவிரவாதிகளினால் வலியுறுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக 20 ஆண்டுகளின் கடுமையான போராட்டத்தின் பின் தனது நோக்கை அடைந்து ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை 2021 ஆகஸ்ட் 15ம் திகதி கைபற்றி ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் என மாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலிபான் இன்றய இணையத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.