இஸ்ரேலிய போர் விமானங்கள் தற்போது தெற்கு காசாவில் குண்டுவீசி வருகின்றன. இந்த விமானத் தாக்குதல் தெற்கு காசாவின் கான் யூனிஸில் நடந்தது. பதிலடியாக காசா எந்த ராக்கெட்டும் ஏவப்படவில்லை. இஸ்ரேலிய சிறைச்சாலையில் இருந்து 6 பலஸ்தீனியர்கள் சுரங்கம் தோண்டி தப்பித்துச் சென்றுள்ளனர். இவர்களே இத்தாக்குதலுக்கு முதற்காரணம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன இயக்கமான ஹமாஸின் இரண்டு நபர்கள் திங்கட்கிழமை இரவு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கிறது.
"யூதர்களின் புத்தாண்டை இன்று கொண்டாட இஸ்ரேலியர்கள் தயாரான நிலையில், ஹமாஸ் தீப்பிடிக்கும் பலூன்களை ஏவி இஸ்ரேலில் பொதுமக்களை பயமுறுத்தும் நோக்கத்துடன் தீவைத்தது. பதிலுக்கு, நாங்கள் காசாவில் ஒரு ராக்கெட் தயாரிக்கும் மையம் மற்றும் ஹமாஸ் இராணுவ வளாகத்தை குறிவைத்தோம்." என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.