நெதர்லந்துக் யுட்ரெக்ட் (Utrecht) நகர டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், 37 வயது துருக்கிய நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளில், சந்தேக நபரான கோக்மென் டானிஸ் (Gokmen Tanis) கைதானார்.
துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் சம்பவத்தில், மூவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்தனர்.
இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறிய அதிகாரிகள், குடும்ப சர்ச்சையின் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நெதர்லந்துப் பிரதமர் மார்க் ரட்ட (Mark Rutte), தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியிருக்கின்றார்.
தேர்தலுக்குச் சில நாள்களே எஞ்சியிருக்கும் வேளையில் தாக்குதல் நடந்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.