தங்கம் என்றவுடன் அனைவரும் பிரம்மிப்பது மற்றும் ஆசைப்படுவது சாதாரணம் தான் ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் தங்கத்தின் வரலாறு??
தங்கத்தை அழகு பூட்டி சந்தோஷப்படும் நாம் அனைவரும் தங்கம் பற்றியும் தெரிந்துக்கொள்வோமே!
பிரௌன்ஸ் ஏஜ் காலத்தில் இருந்து வேறுபட்டது பல பரிமாணங்களில் புலக்கத்திலிருந்த ஒரேயொரு உலோகம் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.மு காலங்களில் எகிப்திய பொற்கொல்லர்கள் முதன்முதலில் தங்கத்தை உருக்கி ஊதுகுழல் செய்தனராம். அதன் பிறகே தங்கத்தினாலான ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளன. கிரேக்கம் லிடியாவின் அரசராக இருந்த க்ரோசிஸ், தங்கத்தை உருக்கி சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளார். பின்பு கி.பி காலங்களில் அமெரிக்க ஐக்கிய நாடான கலிபோர்னியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டும் பணி தொடங்கியது என்று கூறப்படுகிறது. உலகிலுள்ள மிகவும் ஆழமான தங்கச் சுரங்கங்களில் இரண்டு, தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. பெருமதிப்பிற்குரிய தங்கம் எளிதில் நமக்கு அபரணமாக கிடைத்துவிடுவதில்லை. பலரது முயற்சிக்கும், உழைப்புக்கும் பயனாகவே நம்மை அலங்கரிக்கூடிய அந்த ஆபரணம் கைக்கு கிடைக்கின்றன.
Yellow என்ற பழைய ஆங்கில சொல்லிலிருந்தே கியோலோ அதாவது தங்கத்தின் எகிப்திய பெயர் தோன்றியது.
எகிப்திய காலம் தொடக்கம் இன்றுவரை உலோகங்களின் அரசன் தங்கம் தான். எகிப்திய மன்னர்கள் எகிப்தை ஒட்டிய பகுதிகளில் குப்பையை விட தங்கமே அதிகம் காணப்பட்டது என்று கூறியுள்ளனர். தங்க இலை, தங்கத்தட்டு, தங்கத்துகள்கள் என பல வடிவங்களில் தங்கம் பயன்பாட்டிலிருந்தது.அதுமட்டுமின்றி உணவுப் பண்டங்கள், பழரசங்கள், பானங்கள் மற்றும் அலங்காரங்கள் என தங்கம் பல வகைகளில் மக்களால் ஈர்க்கப்பட்டிருந்தது.
அக்காலத்தில் தங்க வேட்டை என்பது பெரிதும் பெருமைக்குரிய ஒன்றாக கருதினார்கள். தங்க வேட்டைக்கு மக்கள் மந்தை மந்தையாக திரள்வது வழக்கமாம்!
நம் உலகில் தற்போது ஏழு கண்டங்களிலும் சமுத்திரங்களிலும் பத்து மில்லியன் டொன் தங்கம் புதைந்துள்ளது என்கிறது ஆய்வுகள். இன்றும் பூமியில் 80% தங்கம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த தங்கத்தில் 50% தங்கமாகவும் அதாவது ஆபரணங்கள், தங்க இலை மற்றும் தங்க தட்டு எனவும் 40% முதலீட்டாகவும் 10% தொழிற்சாலைகளிலும் காணப்படுகிறது என்கிறது ஆய்வுகள்.
தங்கமானது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிக தங்க ஆபரணங்கள் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று உலக தங்க சபை தெரிவித்துள்ளது.
ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.
தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர். இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை. தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும் அதுவே இதன் சிறப்பாகும்.
உலகின் முதல் தங்க ஊதுலை இயந்திரம் 2010 அபுதாபியில் 24கெரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது.
இயற்கையில் உள்ள உலோகங்களில் 58% தங்கமே உள்ளது. இயற்கையின் அரியதோர் அறிவியல் நிகழ்வால் உருவாவதால் என்னவோ, தங்கத்தின் மதிப்பு எப்போதும் நம் மக்களிடையே குறைவதே இல்லை.
தற்காலத்தில் அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் கடுகளவாவது தங்கம் நிச்சயம் நம்மிடம் இருக்கும். ஏனெனில் தங்கமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்டது. நம்மை அலங்கரிக்கும், ஜொலிக்கும் தங்க ஆபரணம் இல்லாமல் எந்த ஒரு விசேஷமும் முழுமையடையாததாக இருக்கிறது. எத்தனை விதமான ஆபரணங்கள் வந்தாலும் தங்கம் மீதான மதிப்பும் மோகமும் நம்மிடையே குறையப்போவதில்லை. அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நமது செல்வநிலையை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம்.