web log free
May 01, 2026

போதையில் தன்னைத் தானே தேடிய நபர்! அதிர்ச்சியில் போலீஸ்

துருக்கி நாட்டில் இனெகோல் நகருக்கு அருகே கயாகா என்ற பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெய்ஹன் முட்லு தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தி காட்டுப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார்.


இதைத்தொடர்ந்து, அவரது நண்பர்கள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். காவல்துறையினரும் அறிக்கை தாக்கல் செய்து காட்டுக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், பெய்ஹன் முட்லுவின் பெயரை சொல்லி தேடியுள்ளனர்.


அப்போது, காவல்துறையினருடன் சேர்ந்து தேடியவர்களுக்கு மத்தியில் இருந்து ‘நான் இங்கதான் இருக்கேன்’ என்று ஒரு குரல் எழுந்தது. இத்தனை மணி நேரமாக பெய்ஹன் முட்லு போதையில் போலீசாருடன் சேர்ந்து தன்னைத் தானே தேடிக்கொண்டு இருந்துள்ளார்.


பெய்ஹன் முட்லு செம போதையில் இருப்பதைக் கண்ட காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd