web log free
April 03, 2025

காதலனின் தந்தையை திருமணம் செய்து வைரலான பெண்

டிக் டாக் காதலனின் தாய் இறந்ததன் காரணமாக அவருக்கு தாய் பாசம் கிடைக்க வேண்டும் என்று காதலி செய்த செயல் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

டிக் டாக் செயலியில் இந்தியாவைச் சேர்ந்த @ys.amri என்ற பெண் ஒருவர் பல வருடமாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலனனின் தாயார் இறந்துவிட்டார்.

இந்த நிகழ்வு தான் காதல் ஜோடியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதில் காதலனுக்காக தற்போது காதலியே தாயாகியுள்ளார். இது குறித்து அந்த பெண் பதிவிட்ட பதிவானது,

"எனது காதலன் அவரது தாய் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தற்போது அவரது பிரிவை எனது காதலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக சமூகத்தை மறந்து நான் ஒரு முடிவினை துணிந்து எடுத்துள்ளேன்.

ஆம், தாய் பாசத்தை இழந்த எனது காதலனுக்கு தாயாக முடிவு செய்தேன். இது குறித்து அவரது தந்தையிடம் பேசி அவரை திருமணம் செய்துகொண்டேன். என் காதலன் இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு அவரின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்" என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.  

Last modified on Wednesday, 13 October 2021 06:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd