web log free
April 03, 2025

500000 பேருக்கு இலவச விசா!

இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

கொவிட்-19 பரவலால் முடங்கிப்போயிருந்த பயணத்துறைக்குப் புத்துயிர் ஊட்ட இந்தியா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கதவுகளை மூடியிருந்த இந்தியா, தனது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

இந்த இலவச விசா திட்டம் 2022 மார்ச் 31 வரை அல்லது 500,000 என்ற எண்ணிக்கையை எட்டும்வரை நடப்பில் இருக்கும்.

இதனால் இந்திய அரசுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்று உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே இத்திட்டத்தின்கீழ் விசா பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 17 October 2021 04:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd