web log free
March 29, 2024

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து பூமிக்கு திரும்பிய ரஷ்யப் படக்குழு

பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குனர் க்ளிம் ஷிபென்கோ தி சேலஞ்ச் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் கதை விண்வெளியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்த படக்குழு சர்வதேச விண்வெளி மையம் செல்ல தீர்மானித்தது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இயக்குனர் க்ளிம் ஷிபென் கோ, நடிகை யுலியா பெரெஸில்ட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெ ரோவ் ஆகியோர் கடந்த 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றனர்.

கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளிக்குச் சென்றனர். அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின், இயக்குனர் க்ளிம் ஷிபென் கோவும், நடிகை யுலியா பெரெஸில்ட்டும் பூமிக்கு திரும்பி உள்ளனர்.

சோயூஸ் எம்எஸ் 18 விண்கலம் மூலம் திரும்பிய அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி உள்ளார். இவர்கள் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.