web log free
April 25, 2024

நியூசிலாந்தில் 2 வாரங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு!

சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆக்லாந்து நகரில், டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, நாடு முழுவதும் முழு ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அமல்படுத்தினார். தற்போது ஆக்லாந்து நகரில் மட்டும் டெல்டா கொரோனா தொற்று குறையாததால், அந்நகரில் மட்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆக்லாந்து நகரில் அமுலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து, பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரடங்கில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கடந்த இரண்டு மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.