web log free
April 03, 2025

விண்வெளியின் வெளியே புதிய கோல்

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

விண்வெளியில் ஏராளமான கோள்கள் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை சுற்றுவதை போல இந்த புறகோள்கள் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. அவைகள் நாம் வாழும் பால்வெளி கெலக்சிக்கு உள்ளே தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது ஒருகோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும்.

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் நியா இமாரா கூறும்போது, ‘நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை பார்க்கிறோம் என்பது உறுதிப்படுத்த சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

 

சுற்றுப்பாதைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் அதை எப்போது பார்க்க முடியும் என்பது எங்களுக்கு தெரியாது’ என்றார்.

Last modified on Thursday, 28 October 2021 12:21
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd