இந்தோனேஷியா − சுமத்ரா தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும்,
இது குறித்த மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அறிவிக்கப்படும்.