web log free
June 02, 2025

தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

தீபாவளி பண்டிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி, உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதிபர் ஜோபைடன் தனது மனைவியுடன் குத்து விளக்கை ஏற்றும் புகைப்படத்தையும் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பதிவில், "இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை ஆகியவற்றை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதை தீபாவளியின்  தீபங்கள் நமக்கு நினைவூட்டட்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Last modified on Friday, 05 November 2021 07:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd