மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ் இரண்டு நாட்கள் உத்தியோகபூா்வ பயணமாக இன்று இலங்கை வந்தடைந்தார்.
பங்களாதேஷ், மாலைதீவு, சிஷெல்ஸ், இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று இரவு 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ் மற்றும் அவரது பாரியார் ஃபஸ்னா அகமது ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து மாலைதீவு ஜனாதிபதி பேசவுள்ளார்.