சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு வூகானிலிருந்து பரவிய கொரோனாவுக்கு எதிராக சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்போது பரவத் தொடங்கியுள்ள புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சமரசத்துக்கு இடமின்றி சீன அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் உலக நாடுகளிலிருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. சீனா மீதான உலக நாடுகளின் கணிக்க முடியாத தடைகளால், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
Photo Credit : Reuters