அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் இன்று ஒன்றுகூடினர்.
வரும் ஏப்ரலில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால் பதற்றமான எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய இளைஞர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பாலஸ்தீனர்கள் பலியாகினர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது