அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துவரும் சூழலில், கலிஃபோர்னியா மாகாணத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்திருக்கும் முதல் மாகாணமாக கலிஃபோர்னியா மாறியுள்ளது. கலிஃபோர்னியா பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட இம்மாகாணத்தில், இது எதிர்பாராதது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால புயல்கள் அதிகளவில் வீசி வருகின்ற போதிலும், விடுமுறை விருந்துகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் காரணமாக தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவிட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.