கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையின் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாகவும் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, குற்றவாளிகளை கைதுசெய்வதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தமிழக பொலிஸார் விசாரணை நடத்தினர்.
குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அவரிகளின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற நபரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில், 7 பேரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.