இங்கிலாந்தில் உள்ள டிவிக்கன் நகரின் கே.எ.ப்.சி கிளையில் கேபிரில்லா என்கிற பெண் வழக்கம் போல சாப்பிட சென்ற போது அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
உணவு பிரியர்களுக்கு எல்லா வித உணவும் அதிகம் பிடித்தாலும், அந்த உணவு மிகவும் ருசியாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் எந்தவொரு உணவாக இருந்தாலும் அதன் தரம் மிகவும் முக்கியம் என்று எல்லோரும் நினைப்போம். உணவின் தரம் குறைந்து விட்டால் அதை சாப்பிடுவோருக்கு நிச்சயம் எரிச்சலை உண்டாக்கும். குறிப்பாக கடைகளில் வாங்கி சாப்பிடும் பல உணவுகள் தரம் குறைந்ததாகவே இருக்கிறது.
சாதாரண கடை முதல் மிகவும் பிரபலமான கடைகள் வரையிலும் இந்த தரம் குறைந்த உணவுகளை விற்கிறார்கள். இது போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. கே.எஃப்.சி உணவகங்களுக்கு சென்று அடிக்கடி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உலக அளவில் பல்வேறு கிளைகளை இந்த உணவகம் வைத்துள்ளதால் இதன் தரம் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் நினைப்போம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள டிவிக்கன் நகரின் கே.எ.ப்.சி கிளையில் கேபிரில்லா என்கிற பெண் வழக்கம் போல சாப்பிட சென்றுள்ளார். அவர் ஹாட் விங்ஸ் பாக்ஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அதை வாங்கி சாப்பிடவும் செய்துள்ளார். அப்போது தான் அவருக்கு மிக மோசமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அந்த பாக்ஸ்க்குள் அவர் எதிர்பாராத விதமாக கோழியின் தலை ஒன்று இருந்தது. அந்த தலை பகுதியும் மசாலா சேர்த்து வறுத்த நிலையில் இருந்துள்ளது. இதை உடனே புகைப்படம் எடுத்துள்ளார். கோழியின் தலை சாப்பிடும் உணவில் இருந்தால் யாரால் அதன் பின் சாப்பிட முடியும்; எனவே அவர் உடனே இதை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இன்ஸ்டாமிராம் பக்கத்திற்கு சென்று இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் "நான் ஆர்டர் செய்த ஹாட் விங் மீளில் வறுத்த கோழியின் தலை இருந்தது, மோசம்" என்று பதிவிட்டு 2 ஸ்டார்ஸ் தந்துள்ளார்.
இந்த ரிவியூவ் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கே.எஃப்.சி-இன் தரத்தை பற்றி பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இப்படியொரு மோசமான அருவருக்கத்தக்க வகையில் உணவின் தயாரிப்பு இருப்பதை பற்றி பலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் இதை பற்றி கமெண்ட் செய்தும் வருகின்றனர். அதில் ஒருவர், "ஏன் இவர்களுக்கு 2 ஸ்டார் கொடுத்திருக்கிறீர்கள், 1 ஸ்டாரே இவர்களுக்கு அதிகம்" என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் "அருவறுக்கத்தக்கது இது" என்று கூறியுள்ளார்.