நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகை குஷ்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக டிவிட் பதிவிட்டு உள்ளார். கொரோனா 2 அலைகளை கடந்த பிறகு, தற்போது கொரோனா தன்னை பிடித்துக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். தனக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளதாகவும், இதனால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்விக்கவும் என்று தெரிவித்துள்ளதுடன், உங்களுக்கும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.