மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி, ஆந்திர மாநிலத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில், ஆட்டை வெட்டி நேர்த்திக்கடன் செய்த நிகழ்ச்சியில், அதை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை பூசாரி ஒரே வெட்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களிடையே, தங்களது பிடித்த தெய்வங்களுக்கு ஆடு, மாடு, கோழிகள் போன்ற உயிரினங்களை பலிகொடுப்பது ஐதிகமாக கருதப்படுகிறது. அதுபோல, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள வலசப்பள்ளியில் அமைந்துள்ள எல்லையம்மனுக்கு, நேற்று இரவு சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக நேர்த்திக்கடனமாக ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இந்த பலிகொடுக்கும் சம்பவம் நடைபெற்றது. ஏராளமானோர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான சுரேஷ் என்பவர், தான் கொண்டு வந்திருந்த ஆட்டை நேர்த்திக்கடனாக செலுத்த வந்தார். அவரது ஆட்டின் தலையை , பூசாரி வெட்டுவதற்காக லாவகமாக குனிந்து பிடித்துககொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் ஆடுகளை வெட்டிவந்த பூசாரி, ஆட்டுக்கு பதிலாக, அதை பிடித்துக்கொண்டிருந்த சுரேசின் கழுத்தில் தான் வைத்திருந்தால் அரிவாளால் ஒரே போட்டாக போட்டார். இதனால் சுரேஷ் கழுத்து வெட்டப்பட்டது. இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடித்தார்.
அருகே இருந்தவர்கள் உடனே ரேசை மீட்டு மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
பலியான சுரேசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பூசாரியை கைது செய்துள்ள காவல்துறையினர், இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.