web log free
April 18, 2026

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதற்காக உள்துறை செயலாளர் ராஜினாமா

ஹாங்காங் உள்துறை அமைச்சர் காஸ்பர் சுய் ராஜினாமா செய்துள்ளார்.

கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி பிறந்தநாள் விழாவை நடத்தியதாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஹாங்காங் அரசாங்கத்தினால் மக்கள் தொகை ஒன்றுகூடலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் மீறி அவர் தனது பிறந்தநாளை அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் உட்பட ஏராளமான மக்களுடன் கொண்டாடியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை கையளித்த உள்துறை அமைச்சர், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு அதிகாரியாக மக்களுக்கு சரியான முன்மாதிரியாக இருக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd