web log free
February 25, 2026

ஹிஜாப் சர்ச்சை: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த முஸ்லிம் தலைவர்!

ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

"இது எங்கள் வீட்டுப் பிரச்சினை. இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஒவைஸி பேசினார்.

“பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்சினை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இந்த நாடு என்னுடையது. இது உங்களுடையது அல்ல. இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயன்றால் காயமடையும் என்று ஒவைஸி எச்சரிக்கும் வகையில் பேசினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd