இந்திய வருமான வரி துறையினர் மத்தியபிரதேசம், டெல்லி, கோவா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் லோக் சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிட பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
மேலும் பல அரசியல் கட்சியினர் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தகவல் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மத்தியபிரதேசம், டெல்லி, கோவா ஆகிய பகுதியில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பெருந்தொகை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.