ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிக் குழு தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததில் பா.ஜ.க பல்வேறு முறைகேடுகளை செய்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மேலும் இந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டதாக எதிர்கட்சிகள் புகார் கூறி வந்தனர்.
அதனால் முன்னாள் மத்திய அமைச்சர்களான யஸ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்த விலையை விட அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக பா.ஜ.க அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி , ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.