web log free
April 05, 2025

பாராளுமன்றில் அமர்ந்து ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்!

பிரிட்டனில் பாராளுமன்ற அலுவல்கள் நேரத்தில், 'மொபைல் போனில்' ஆபாச படம் பார்த்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.,க்கள், அரசு தலைமை கொறடாவை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், பார்லி., அலுவல் நேரத்தில், அமைச்சர் ஒருவர் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்ற பழமைவாத கட்சியின் கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸ், அவற்றை பார்லி., குறை தீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

''இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹீடன் ஹாரிஸ் உறுதி அளித்துள்ளார்.

Last modified on Friday, 29 April 2022 10:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd