web log free
November 21, 2024

குமுறுகிறது எரிமலை - மீண்டும் சுனாமி ஆபத்து

இந்தோனேசியாவிலுள்ள அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சுனாமி தாக்கியதன் காரணமாக. 281 பலியாகியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் மீண்டுமொரு சுனாமி தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலை வெடித்தன் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வுகளே பாரிய சுனாமிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி ஆபத்து குறித்து பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பு தொடர்வதால் மற்றொரு சுனாமிக்கான வாய்ப்புகள் உள்ளன என இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக மக்கள் கடற்கரையோரங்களில் நடமாடக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Last modified on Thursday, 27 December 2018 09:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd