web log free
April 18, 2024

வீதியில் குப்பை பொறுக்கிய இந்திய பிரதமர் மோடி

டில்லியில் பிரகதி மைதான மறுவளர்ச்சி திட்டப்படி ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 920 கோடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.

இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிரதான சுரங்கப்பாதை மற்றும் 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் மோடி, சுரங்கப்பாதையை நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிதறி கிடந்த குப்பைகள் மற்றும் பாட்டீல்களை எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டார்.

அது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல.

சுற்றுப்புறங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மோடி, கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கு கிடந்த பிளாஸ்டிக் பாட்டீல்கள், தட்டுகள் மற்றும் குப்பைகளை அகற்றினார்.

தூய்மை பாரத இயக்கம் அல்லது நமாமி கங்கா திட்டத்தில் தூய்மைக்கு பிரதமர் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

தூய்மையை வலியுறுத்தி கடந்த 2014 அக்.,2 ல் தூய்மை பாரத இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில், முக்கியமாக ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை கட்டுதல், பொது இடங்களில் கழிப்பறை மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.