கனடாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்டோர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது மீட்புப்பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட செல்லப்பிராணிகளை மீட்டுவருகின்றனர்.
இதுவரை கிட்டத்தட்ட 40 பிராணிகள் மீட்கப்பட்டதாகவும், வெள்ளத்தால் சில செல்லப்பிராணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
அண்மையில் மோண்ட்ரியலின் (Montreal) மேற்குப் பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
அங்கு நீர் வற்ற, இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும், தற்போது நிலவரம் கட்டுக்குள் கொண்டவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
கடந்த 2017ஆம் ஆண்டு க்யூபெக் (Qubec) மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.