ஜப்பானியப் பட்டத்து இளவரசர் நருஹிட்டோ இன்று அரியணை ஏறியுள்ளார். புதிய ரெய்வா யுகத்தில் அவர் பேரரசராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜப்பானின் 126வது பேரரசராக அவர் அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறினார். அவரின் தந்தை பேரரசர் அக்கிஹிட்டோ நேற்று அரியணையைத் துறந்தார்.
200 ஆண்டுகளில் அரியணை துறந்திருக்கும் முதல் ஜப்பானியப் பேரரரசர் அவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறந்தவர் பட்டத்து இளவரசர் நருஹிட்டோ.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரியண ஏறும் முதல் பேரரசரும் அவரே. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபெ (Shinzo Abe), அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் உட்பட சிறு குழுவினர் முன்னிலையில் இளவரசர் நருஹிட்டோ அரியணை ஏறும் சடங்கு நடைபெற்றது.