web log free
November 22, 2024

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒருதொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

இந்த விடயத்தினை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள தடுப்பூசிகளானது ஸ்புட்னிக் V முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 120,000 பேருக்கான இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச சகோதரர்களுள் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவிருக்கம் சமல் ராஜபக்ஷவுக்கே கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன.அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.அமைச்சர் மஹிற்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் கிங்ஸ்லீ ரத்னாயக மற்றும் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் முதல் நுவரெலியா தோட்டத்தில் விறகு சேகரிக்கும் போது காணாமல் போன 25 வயது பெண் ஒருவர் இராணுவப் படையினர், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஜே பாலன் கத்முனா தரணி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தாயுடன் நுவரெலியா எஸ்டேட்டில் விறகு சேகரிக்கச் சென்றார், அன்றிலிருந்து காணாமல் போனார்.

தகவலறிந்து இந்த ஒருங்கினைப்பு சிறப்பு தேடல் நடவடிக்கை சில மணிநேரங்களுக்குள் தொடங்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் தேடுதல் குழு உறுப்பினர்கள் பணியில் தோட்டத் தொழிலாளர்கள் அளித்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தேடுதல் தொடர்ந்து சென்றது.

அப்பகுதியில் அடர்ந்த காடும் மோசமான வானிலையும் இருந்த போதிலும் தேடும் குழுக்கள் அவளை தேடும் பணியை கைவிடாது அவளை முற்றிலும் உடல் நீரிழந்த நிலையில் தரையில் கிடந்திருக்கையில் கண்டுப்பிடித்தனர்.

நேற்று (9) மாலை சுமார் 6.30 மணியளவில் கண்டுப்பிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  

 

 

Page 5 of 7
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd