சீனி, பருப்பு, கோதுமை மா உள்ளிட்ட 17 அத்தியாவசிய உணவுப் பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா உள்ளிட்ட 17 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாசிப்பயறு, நெத்தலி, ரின் மீன், கடலை, , கருவாடு, சோளம் ஆகியவற்றுக்காக அதிகபட்ச சில்லைறை விலை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
17 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம் நேற்று 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னர் வெளியிடப்பட்ட 07 கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்றும் (03) நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இதன்படி ,பல பகுதிகளில் மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மின்சார ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையினால், மின்சாரம் தடைப்படும் என வெளியான தகவல்களின் பின்னரே, மக்கள் மண்ணெண்ணை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் ,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரம் தடைப்படாது எனவும், அவ்வாறு மின் தடை ஏற்பட்டால் அதனை விரைந்து வழமைக்கு கொண்டு வருவதாகவும் மின்சார சபைத் தலைவர் நேற்று உறுதியளித்திருந்தார்.
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமைப் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சரவை உபகுழுவில் உரையாற்றிய அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இதற்காக அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார பேருந்துகளை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
தற்போது, தனியார் துறை பல்வேறு இடங்களில் சுமார் 400 மின்னேற்றும் நிலையங்க நிலையங்களை அமைத்துள்ளது. மேலும் அந்த எண்ணிக்கையை மேலும் 350 அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
தற்போது ஒரு முறை சார்ஜ் செய்த வாகனமொன்று பயணிக்கக்கூடிய ஆகக்கூடிய தூரம் 300-350 கிலோமீற்றர் ஆகும் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்
பெலாரஸ் - லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் ஒக்டோபர் 5ஆம் திகதி லித்துவேனிய நாட்டின் எல்லையிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள புதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்கள் என்பனவற்றின் மூலம் குறித்த நபர் 29 வயதான இலங்கைப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து அவரது மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பானது நேற்று புதன்கிழமை(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய இன்று காலை சஜித் பிரேமதாசவுக்கு திடீரென தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கரிமப் பசளை விவகாரம் பற்றி உரையாடியுள்ளார்.
கட்சியின் உயர்பீடத்துடன் இது பற்றி பேச்சு நடத்தி மீண்டும் சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.