web log free
May 03, 2024

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை ஒன்றுசேர்த்து உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2,000 ரூபா வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவின் மதவடி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அப்பகுதி மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

அது தொடர்பில் தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர்,

உதவி தொகை வழங்கியவர், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் ஒருவருக்கு தலா 2,000 ரூபா வீதம் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்னுரிமை வழங்கு வேண்டிய வகுப்புகள் தொடர்பிலான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.சி.ஈ உயர்தர மாணவர்கள், ஜி.சி.ஈ சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முதலில் பாடசாலைகளை அரம்பிக்க திட்டமிடப்பட்டள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#இலங்கை #பாடசாலை #மாணவர்கள் #எல்எம்டீதர்மசேன 

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி 19 வயது யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் சென்று இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

#இலங்கை #முல்லைத்தீவு #அகதி #இந்தியா #தனுஷ்கோடி 

Page 4 of 4