web log free
May 03, 2024

 பேராதனை பல்கலைக்கழகம் COVID-19 நோயாளிகளை கண்டறிய இடைக்கால சோதனை முறையாக ஒரு சோதனை கருவியை உருவாக்கியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிகா பெர்னாண்டோ தலைமையிலான குழுவால் இந்த சோதனை கிட் வடிவமைக்கப்பட்டது.

இது கோவிட் -19 நோயாளர்களைக் கண்டறிய ஒரு திறமையான மற்றும் குறைந்த விலை முறையாகும். முதலீட்டாளர்கள் ரூ. 1500  என்ற சிறிய விலைக்கு , ஏற்கனவே தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கருவி மூலம் ஒரு கோவிட் -19 சோதனையை நடத்தப்படலாம் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது .

பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லாமவன்சா உள்ளிட்ட குழுவினரால் புதிய சோதனை கருவி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டொக்டர் எலியந்த வைட் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவருக்கு ஒக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என அவர் தெரிவித்தார்.

வைட் எந்தவொரு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை கூட பெறவில்லை. அவர் தற்போது கொழும்பிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ‘ஃபைசர்’ தடுப்பூசியை நாட்டில் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று ஒப்புதல் அளித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறினார்.

12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘ஃபைசர்’ தடுப்பூசி வழங்குவதன் மூலம், கொரோனா சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தடுக்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், கொவிட் ஒழிப்புக்குழுவின் ஒப்புதலுடன், கூடிய விரைவில் தடுப்பூசியை போடத் தொடங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து இலங்கையில் வாழும் தம்பதியரிடம் இயலுமானால் கர்ப்பம் தரிப்பதனை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதனை கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும், தற்போது, உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் காரணமாக கர்ப்பிணிப் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Page 3 of 4