பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.
113 உறுப்பினர்களின் கையொப்பம் தேவைப்படும் நிலையில் பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள் கூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது, தற்போது 103 ஆசனங்கள் மாத்திரமே அரசுக்கு காணப்படுகின்றது பிரேரணைக்கு 113 உறுப்பினர்கள் கையொப்பம் கிடைக்காவிட்டால் பதவி விலகும் நிலை பிரதமர் மகிந்த தள்ளப்படுவர் ,எனவே பதவி துறக்கும் அறிவிப்பை மகிந்த விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
'தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்' என இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவான்மியூரில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை இயக்கத்திற்கும், தி.மு.க.,விற்கும் காலம் காலமாக உள்ள தொடர்பு தொடரும். இதில், கலகத்தையோ, பிரிவையோ ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சியாக இருந்த போதே, இஸ்லாமியர்களுக்காக தி.மு.க., குரல் கொடுத்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்காக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது.
மதம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும், அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்; பலமும் அதிகம்.
தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி செய்தால், தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கின்றனர். நம்மை பிளவுப்படுத்துவதன் வாயிலாக, நம் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றனர். அதற்கு தமிழினம் பலியாகக் கூடாது. இதற்கு பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து, தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதியான, நிம்மதியான நாடு தான் அனைத்து விதமான வளர்ச்சியையும் பெற முடியும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழலை, ஓராண்டு காலத்தில் நம் அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து தற்சமயம் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
மருதானை, டெக்னிக்கல் வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணியில் வருவோர் காலி முகத்திடல் போராட்டக் களத்திற்குச் செல்வர் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெறவுள்ள போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸாரால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டு நிரந்தர வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு திடீரென இந்த வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக இன்று கொழும்பு நோக்கி வருகை தருகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த சுயாதீன குழு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமாயின், இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பிலான திட்டங்கள் குறித்தும் அந்தக் குழு கலந்துரையாடியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 20க்கு கீழ் மட்டுப்படுத்திக்கொள்வது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது.
இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அவர் என்னுடனோ அல்லது அமைச்சர்களுடனோ பேச்சுவார்த்தைகளிற்கு வராதவரை அவர்கள் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குணவர்தனவுக்கு பிரதமர் பதவியைத் தவிர வேறு அமைச்சுப் பதவியும் வழங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
அவர் தற்போது மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அவைத் தலைவராகவும் உள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அக் கட்சின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று கூடிய கட்சியின் உயர்பீடமே இந்த முடிவை மேற்கொண்டதாகவும் ,வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளதாகவும் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டரீதியாக இதனை உறுதிப்படுத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்