எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
லங்கா இந்திய நிறுவனம் தனது விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32.50ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம் நஷ்டம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெருமவிடம் வினவியபோது, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதன் காரணமாக எரிபொருள் விலை தொடர்பில் முடிவெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அத்தி மர இலைகளில் 3 நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிரிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
அத்திப்பழத்தை ஆராய்ந்த பின்னர் அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் 4 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். அத்திப்பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும். உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும் தீரும்.
இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாக பயன்படுகிறது. சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். ரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்
பிப்ரவரி மாதம் 8-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
8-ம் தேதி செவ்வாய் கிழமை :
ரதசப்தமி
* சூரிய சந்திரர் விரதம்
* சித்தயோகம்
* பீஷ்மாஷ்டமி
* குரங்கனி முததுமாலையம்மன் பவனி
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்
9-ம் தேதி புதன் கிழமை :
* கார்த்திகை விரதம்
* பெருவயல், திருத்தணி தலங்களில் முருக பெருமான் பவனி
* சந்திராஷ்டமம் - சித்திரை
10-ம் தேதி வியாழக்கிழமை :
* திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி
* திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டாள் தெப்பம்
* சந்திராஷ்டமம்-சுவாதி
11-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சித்தயோகம்
* நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்சவம்
* திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கருட வாகன பவனி
* சந்திராஷ்டமம் - விசாகம்
12-ம் தேதி சனிக்கிழமை :
* சர்வ ஏகாதசி
* பெருவயல் முருகப்பெருமான் மயில் வாகன பவனி
* காரமடை அரங்கநாதர் சிம்ம வாகன பவனி
* வளர்பிறை ஏகாதசி
* சந்திராஷ்டமம் - அனுஷம்
13-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* விஷ்ணுபதி புண்ணியகாலம்
* வராகத்துவாதசி
* திருமெய்யம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்
* மதுரை கூடலழகர் எடுப்பு சப்பரத்தில் பவனி
* சந்திராஷ்டமம் - கேட்டை
14-ம் தேதி திங்கள் கிழமை :
* வராக கல்பாதி
* சுபமுகூர்த்தம்
* பிரதோஷம்
* நத்தம் மாரியம்மன் பவனி
* சந்திராஷ்டமம் -மூலம்
சிறிய மாற்றம் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்று சொல்வார்கள். கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் ஆச்சரியத்தக்க பலன்களை அடையலாம்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பளபளப்பான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறார்கள். வழக்கமாக பயன்படுத்தும் சீப்புக்கு பதிலாக வேப்ப மர துண்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சீப்பை உபயோகித்தால் தலைமுடியில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தலை முடிக்கு வேப்பம் சீப்பு பயன்படுத்துவது நல்லதா? என்ற கேள்வி நிறைய பேரிடம் இருக்கிறது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களை கொண்டது. வேப்ப மர சீப்பு பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனை பயன் படுத்துவது தலை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண் தரப்பினர் எதிர்கொள்ளும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர், கடந்த ஆண்டு கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு தனது ஆணுறுப்பை 1.5 அங்குலம் சுருங்கி இதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30-40 வயதுக்குட்பட்ட இவரின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். புணர்ச்சி குறைந்தாக குறிப்பிடுகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், நான் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, எனக்கு சில விறைப்புத்தன்மை குறைபாடுகள் இருந்தன,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் இந்த நபரின் பாலுணர்வை தூண்டும் திறன் முன்பை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நிலைமைகளுக்கு நீண்டகால சிகிச்சை மூலம் அவற்றை குணப்படுத்த முடியும், ஆனால் நோயாளியின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடைவதால், அது மீட்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் யுனிவேர்சிட்டி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 3,400 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில், 200 பேர் சுருங்குதல் என்ற அரிய பக்க விளைவுகளுடன் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதற்கிடையில், மியாமி மில்லர் மருத்துவக் கல்லூரியின் குளோபல் மென்ஸ் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் நாளமில்லா செல்கள் சேதமடைவதால் ஆண்களின் பாலியல் தூண்டுதல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதன் முழுமையான முடிவுக்கு வர இன்னும் ஆராய்ச்சி தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ராகம வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்று தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவின் மகன் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதால் இராஜாங்க அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முதல் முறையாக முந்தியுள்ளார் கவுதம் அம்பானி என தெரிவித்துள்ளது.
கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. கிட்டதட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பானது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
முதலிடத்தில் நீடித்து வந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலராகும்.
சமீப காலமாக அம்பானியை விட, அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலையக தமிழ் மக்களின் அபிலாஷை ஆவண வரைபு மலையக விற்பன்னர்களின் பங்களிப்பில் . தயாரிக்கபட்டுள்ளதாகவும் , இன்று மாலை அது தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஆலோசனை சபை விற்பன்னர்-உறுப்பினர்கள் மத்தியில் நடைபெறும் எனவும் .
அடுத்த கட்டமாக, ஏனைய மலையக அரசியல், சிவில் தரப்புகளுடன் உரையாடப்பட்டு இறுதி செய்யப்படும். செய்யபட்டு இந்த மலையக அபிலாஷை ஆவண விண்ணப்பம், இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல், சமூக தலைவர்கள், தமிழக முதல்வர், தமிழக கட்சிகள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூக தரப்புகளிடம் கையளிக்க/சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் முகநூலில் தெரிவித்துள்ளார்
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலமானார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான், “லதா மங்கேஷ்கரின் மறைவால் துணை கண்டம் உலகம் அறிந்த சிறந்த பாடகர்களில் ஒருவரை இழந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பலருக்கும் இவரது பாடல்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, “இசை என்பது உலகளாவிய மொழி என்ற வாக்கியத்திற்கு உயிர் கொடுத்து மக்களை பல ஆண்டுகள் எல்லை கடந்து மகிழ்வித்ததற்காக லதா மங்கேஷ்கருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களுக்கும், லதா மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, “லதா மங்கேஷ்கர் இசைக்கு அளித்த பங்களிப்பின் மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் மனதில் எப்போதும் வாழ்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.