web log free
April 03, 2025

கடினமான மலச்சிக்கலும் இந்த பழத்தை சாப்பிட்டால் தீரும்.

அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அத்தி மர இலைகளில் 3 நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிரிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

அத்திப்பழத்தை ஆராய்ந்த பின்னர் அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் 4 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.


இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். அத்திப்பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும். உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும் தீரும்.

இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாக பயன்படுகிறது. சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். ரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd