இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபாவாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
"எங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்துள்ளன, எங்கள் தலைவரும் கலந்துகொள்வார். பயணத்தின் நேரம் திட்டமிடல் மூலம் தீர்மானிக்கப்படும். தேவைப்படும்போது இந்த விஜயங்களை மேற்கொள்வது முக்கியம்," என்று அவர் கூறினார்.
தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விஜயம் இடம்பெறும் என வலியுறுத்திய SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேர்தலுக்குப் பின்னர் செல்வதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்தார்.
எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.
இதன்போது,12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 3,790 ரூபாவாக உள்ளது.
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.
420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379ரூபாவாகும்.
377 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
இதேவேளை, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றரின் விலை தொடர்ந்து 317 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை தொடர்ந்து 202 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(30) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற "ஒன்றாக வெல்வோம்" மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் பேசவும், நலம் விசாரிப்பதற்காகவும் சிறைச்சாலைக்குச் செல்வதை ஐக்கிய மக்கள் சக்தி தவிர்த்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்களுடன் ஹிருணிகா பிரேமச்சந்திர முரண்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்காக மக்கள் ஆதரிக்காதமை குறித்து மிகவும் கவலையடைவதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, அவற்றுக்காக பேரம் பேசுவது ஆகியவற்றை தேர்தல்களில் எமது மக்கள் வழங்கும் மக்கள் ஆணையினால் கிடைக்கும் எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராடங்களையும் முன்னெடுத்து பெற்று கொள்ளும்.
நாம் பெறுகின்ற இந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென் மேலும் செழுமை படுத்த அவசியமான அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். எமது இந்த நிலைப்பாடு, எமக்கு மட்டும் சாதகமானது அல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் “தொல்லை இல்லாமல்” சாதகமானது என நான் மிக தெளிவாக நேற்று அமெரிக்க தூதர் ஜூலி சாங் இடம் தெரிவித்தேன். அதையே நேற்று முன் தினம் இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரே இடமும் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக சர்வதேச சமூக பிரதிநிதிகளுடன் நடத்தி வரும் சந்திப்புகள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,
உலகம் இன்று மிக வேகமாக மாறி வருகிறது. உலக ஒழுங்கமைப்பு என்பது பலம் வாய்ந்த நாடுகளின் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க படுகிறது. எமது மக்களின் அரசியல் துன்பங்கள், துயரங்கள் பெரிய நாடுகளுக்கு பொருட்டாக தெரிவதில்லை. இலங்கை உட்பட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பாக உலக ஒழுங்கமைப்பு பலம் வாய்ந்த நாடுகளால் தமது நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க படுகின்றன.
இந்நிலையில் நாம் உலக நாடுகளை அணுகி எமது அரசியல் போராட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். இந்நாட்டு பிரதிநிதிகளும் இவற்றை பொறுமையாக கேட்கின்றார்களே தவிர எமக்காக அரசியல் போராட்டங்களை அவர்கள் முன்னெடுப்பது கிடையாது. உலக ஒழுங்கமைப்பு மிக வேகமாக இந்த நிலைலையை நோக்கி நகர்ந்து மாறி விட்டது.
ஆகவே, சர்வதேச சமூகத்திடம் எமது அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. ஆனால், அவர்கள் செய்ய கூடிய எம்மை நோக்கிய அவர்களின் பொறுப்புகள் சில உள்ளன. நாம் உள்நாட்டில் பெறுகின்ற அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென் மேலும் செழுமை படுத்தும், அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். அவற்றை எப்படி பெற வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, ஆகியவற்றை மக்கள் ஆணையுடனான எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களை முன்னெடுத்து பெற்று கொள்வோம். இதுவே எமக்கு சாத்தியமான கொள்கை ஆகும். அதற்கு உரிய அரசியல் பலத்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எமது மக்கள் வழங்கி உள்ளார்கள். எதிர்காலத்தில் மிக அதிகமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் ஒரு தூர பார்வையுடனேயே இதை கூறுகிறேன். எவ்வளவு அதிக வாக்குகள் எமக்கு கிடைகின்றனவோ, அந்த அளவு எமது பலம் உயரும். எமது பலம், எந்த அளவு உயர்கின்றதோ, அந்த அளவு எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராடங்களையும் முன்னெடுத்து நாம் உரிமைகளை பெறுவோம்.
நாற்பது வருடங்களாக மலை நாட்டில், தென் இலங்கையில் குப்பை கொட்டிய பிற்போக்கு கும்பலை விட பல மடங்கு பணிகளை நாம் 2015-2019 வரையான நான்கே வருடங்களில் செய்து காட்டி உள்ளோம். எதிர்காலத்தில் மிக விரைவாக இன்னமும் பல காரியங்களை நாம் செய்ய உள்ளோம். மக்கள் பலமே எமக்கு வேண்டும். எம்மை எதிர்க்கும் உதிரிகளை தேர்தல்களில் தூக்கி வீசி, எமது பலத்தையும், ஆட்சியையும் நாம் நிலை நாட்டுவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலவஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதியின் மகனாக இல்லாவிட்டால் மட்டக்களப்பு நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு கூட தகுதியற்றவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் இருப்பதற்கான ஒரே தகுதி அவர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது மட்டுமே என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.