ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஸ்ரீலங்கா கட்சியின் பிரச்சார செயலாளர் திசர குணசிங்க ஏசியன் மிரருக்கு தெரிவித்துள்ளார்.
சந்திரிகா பண்டாரநாயக்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் புரவலர் எனவும் அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்தவோ அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவோ மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டாலும் ஒழுக்காற்று விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக திசர குணசிங்க குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர்கள் தடை செய்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அத்தனகல்ல தொகுதியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
அத்தனகல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலக வளாகத்தில் இருந்து ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.