web log free
May 03, 2024

தேர்தலுக்குப் புது வியூகம்! மொட்டுக் கட்சியை இறுக்கிப் பிடிக்கும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளார். 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்ததன் காரணமாகவே கட்சித் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, ​​மஹிந்த ராஜபக்ஷ, அரசியலில் நடைமுறையில் கிராம மக்களுடன் இணைந்து செயலாற்றியுள்ளாரா என்பதுடன் கல்வியிலும் முதன்மை கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு திறமையான இளம் பிரதிநிதிகளை முன்வைப்பதில் அதிக கவனம் செலுத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதுடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விண்ணப்பங்களை தனித்தனியாக ஆராயவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பல விசேட கலந்துரையாடல்கள் கடந்த வாரம் நெலும் மாவத்தை பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.