web log free
May 04, 2024

இலங்கை காற்றின் தரம் இன்னும் ஆபத்தில்

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையான நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 190 ஐ விட அதிகரித்துள்ளது.

அந்த வகையில் பார்த்தால் கொழும்பில் 191 ஆகவும், பதுளையில் 169 ஆகவும், கேகாலையில் 155 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

இதேவேளை களுத்துறையில் 146 ஆகவும், கண்டியில் 126 ஆகவும், இரத்தினபுரியில் 114 ஆகவும், குருநாகலையில் 106 ஆகவும், காலியில் 97 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நேற்று முன் தினம் வளிமண்டலத்தில் அதிகளவான மாசு படிந்திருந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்திருந்தது.

எனினும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் நேற்று முதல் குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.