web log free
June 19, 2026

ஜானகி வெளியே திலினி மீண்டும் உள்ளே

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியை மேலும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (13) வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தக பெண் ஜானகி சிறிவர்தனவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd