3வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி அந்த கலந்துரையாடல்களை நடத்தியதாக அக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் குறிப்பிடுகின்றார்.
காணி மற்றும் காவல்துறை தொடர்பான 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு நன்மை ஏற்படும் எனத் தெரிவித்த அவர், இதனை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி நேர்மையாக தலையிட்டுள்ளதாகவும், கலந்துரையாடலின் போது கட்சித் தலைவர்களினால் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.