மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த தலைமை மாற்றம் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இரண்டு வருடங்களின் பின்னர் தனது அரசியல் வாழ்க்கையை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இச்செய்தி புனையப்பட்ட ஒன்று என்றும் அதில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.