கட்சி என்ற ரீதியில் தவறுகள் நடந்திருக்கலாம், அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனவே கட்சியாக மறுசீரமைக்கப்பட்டு அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்த நேரத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
அதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை என்பன தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.