web log free
July 01, 2026

ஒரு வருடத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது

அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

முதற்கட்டமாக வாக்குப்பதிவு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும், அதன் பிறகு மேலும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போதும் உள்ளாட்சித் தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக நடத்த வேண்டும், அதன்படி, இம்மாதம் 28ஆம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்கள் கோரப்பட வாய்ப்புகள் அதிகம்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான பொருளாதார அல்லது பாதுகாப்பு நிலைமைகள் இல்லை எனக் கூறி இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd