web log free
April 26, 2025

மதுபான சாலைகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

குடும்பத்தை மையமாகக் கொண்ட தேர்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் உள்ள பெரும்பாலான மதுபானக் கடைகள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதால் போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பது கடினமான விடயமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இலங்கையில் 4910 சட்டப்பூர்வ அனுமதி பெற்ற மதுபானசாலைகள் உள்ளதாகவும் அவற்றில் 2000க்கும் அதிகமானவை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 128 மதுபானக்கடைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd