web log free
May 03, 2024

உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி, பவ்வாகம பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே வேட்புமனுக்களை தயாரித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியில் இருந்து ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என ஜே.வி.பிக்கு விடுத்த சவாலை ஜே.வி.பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எனவே ஜே.வி.பி நாவலப்பிட்டி தொகுதிகளில் தினசரி கூட்டங்களை நடத்தும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி தொகுதியில் பல அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளதால் தான் தேர்தலுக்கு அஞ்சவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.